பிரம்மயுகம் இயக்குநரின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்...!
May 11, 2025, 13:28 IST
பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது.இந்த நிலையில், இப்படத்திற்கு 'டைஸ் ஐரே' (Dies irae) எனப் பெயரிட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.