மீண்டும் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு...!
Apr 22, 2025, 18:04 IST
சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். கார்த்தி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். தற்போது ரஜினியை வைத்து 'கூலி' எனும் படத்தை இயக்கி உள்ளார். ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.