×

பிரபல இயக்குனரை திருமணம் செய்தாரா பவி டீச்சர்.. யாரை தெரியுமா?

 


யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்‌ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழலில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டாம் திட்டம், அடியே, ஹாட்ஸ்பாட் போன்ற படங்களை இயக்கி விக்னேஷ் கார்த்திக், பிரிகிடா உடன் திருமண குளத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லை படத்தின் ப்ரோமோஷனா ? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.