துபாய் கப்பலில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்ட பிரதர் படக்குழு
Oct 27, 2024, 18:30 IST
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர். பிரியங்கா மோகன் பூமிகா, சரண்யா, பொன்வண்ணன், நட்டி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். அக்கா-தம்பி உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இத்திரைப்படம் ஜெயம் ரவிக்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் தற்போது துபாய் சொகுசு கப்பலில் இந்த படத்தின் விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்பட பட குழுவினர் பங்கேற்றனர். பிரதர் படத்திற்கு அடுத்ததாக ஜினி, காதலிக்க நேரமில்லை, உள்பட சில புதியபடங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.