"படங்களை கிண்டல் செய்வது தவறு" -பன் பட்டர் ஜாம் பட ஹீரோ ராஜு
தற்போது பன் பட்டர் ஜாம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .
மாணவர் ராஜு ஜெயமோகனின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினியும் சம்பந்தியாக விரும்பி, தங்கள் வாரிசுகளை அவர்கள் அறியாமலேயே காதலிக்க வைத்து, இருவீட்டு சம்மதத்துடன் ‘அரேஞ்ச்டு லவ் மேரேஜ்’ ஆக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் ராஜு வேறொரு பெண்ணை காதலிக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதுதான் பன் பட்டர் ஜாம் படத்தின் கதை.
ஒரு விழாவில் இப் படத்தின் இயக்குனர் ராகவ் மிர்தாத்,மற்றும் நடிகர் ராஜு ஜெயமோகன், மைக்கேல் ஆகியோர் பேசுகையில்,
பன் பட்டர் ஜாம் திரைப்படம் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெண்கள் அதிகமானோருக்கு பிடித்துள்ளது குடும்பமாக பலரும் வந்து திரைப்படத்தை கண்டு செல்கிறார்கள் என தெரிவித்தனர்.
ஒரே நாளில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் பொழுது எத்தனை திரைகள் என்று முடிவு எடுப்பது நடிகர்கள் , இயக்குனர்கள் கையில் இல்லை அது இயற்கையாக எவ்வாறு நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என தெரிவித்தார்.
தம்மை பலருக்கும் அடையாளம் காட்டியது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் என்றும் கூறிய நடிகர் ராஜூ ஒரு திரைப்படத்தில் பாசிடிவ் நெகட்டிவ் இரண்டையும் கூறுவது தான் ஒரு விமர்சனமாக இருக்கும் அதைத் தவிர்த்து கிண்டல் செய்வது தவறு என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.