தரமான சம்பவம் கமிங்... உருவாகிறது 'சார்பட்டா பரம்பரை' பார்ட்-2 !?
‘சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பா. ரஞ்சித், ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஆர்யா இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக மிரட்டியிருந்தார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சந்தோஷ் பிரதாப் பசுபதி, சஞ்சனா நடராஜன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
வடசென்னையில் இரு பரம்பரையினருக்கு இடையே நடைபெறும் பாக்சிங் போட்டி மற்றும் பாக்சிங் வீரர்கள் எப்படி வன்முறைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருந்தது.
படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. படத்தின் இசை, உருவாக்கம், நடிகர்களின் அற்புதாமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ஒரு சேர சங்கமித்து ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது ஒரு சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது.சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னரே சார்பட்டா பரம்பரை படத்தின் கதை வெப் சீரிஸாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதில் டான்சிக் ரோஸ், டாடி கதாபாத்திரங்கள் எப்படி பாக்சிங் வாழ்க்கைக்குள் நுழைந்தனர் என்ற கதைக்களத்தில் வெப் சீரிஸ் உருவாகலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.