‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங்கில் தொடர்ந்து குண்டுவெடிப்பு... உடனடியாக ஷூட்டிங்கிற்கு தடை விதித்ததால் பதற்றம் !
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பிற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், அமெரிக்கன் நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு மாவட்ட ஆட்சியர் திடீரென தடை விதித்துள்ளார். இதற்கு காரணம் புலிகள் சரணாலய வன பகுதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இது குறித்து தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வந்தனர். இதுதவிர களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படத்ன் படப்பிடிப்பிற்காக விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் வெடிகுண்டு வெடிக்க அனுமதி அளித்தது யார் என்று கூறி ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.