×

கேப்டன் மில்லர் விழாவில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்... காலில் விழுந்து மன்னிப்பு...

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ், நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

null