×

வீடு திரும்பினார் கேப்டன் ‘விஜயகாந்த்’.

 

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் இன்று டிஸ்சார் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

நடிகனாக கோடான கோடி ரசிகர்களை சம்பாதித்த விஜய்காந்த், அரசியலுக்கு தாவி அங்கும் தனக்கான இடத்தை பிடித்தார். இந்த நிலையில் கடந்த  சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், அரசியலிலிருந்து ஓய்வெடுத்து அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் நிலை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையொட்டி இன்று டிஸ்சார் செய்யப்பட்டுள்ளார். இதனை மருத்துவமனை அறிக்கை மூலமாக தெரியப்படுத்தியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.