கார் ரேசிங்: 270 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த அஜித் கார்...
Mar 4, 2025, 15:42 IST
நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் கார் ரேசிங் போட்டியில் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் நடிப்பில் அண்மையில் ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து திரைக்கு வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது.