×

சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு : நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு

 
பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர், துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் உள்துறை மந்திரி வாங்கலபுடி அனிதா ஆகியோரது படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர். கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திராபுரம் மோரம்புடியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பத்மாவதி நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பொம்மூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.