×

விஜய் ஆண்டனியை பாராட்டும் திரைப்பிரபலங்கள், நெட்டிசன்கள்

 

இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இப்படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ரத்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீராவின் மறைவுக்கு பின்னர், ஒரு சில நாட்களிலேயே தனது படத்திற்காக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதனை திரைப்பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தன்னை நம்பியுள்ள தயாரிப்பாளருக்காகவும், ரசிகர்களுக்காகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் விஜய் ஆண்டனி பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பாராட்டுக்குரியது என கமெண்ட் செய்து வருகின்றனர்.