சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட்...!
Nov 27, 2024, 19:27 IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர், ரஜினிகாந்தின் லுக்கை மொத்தமாக மாற்ற இருக்கிறார் என்று தெரிகிறது.
ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆலிம் ஹக்கிம், ’ கிங், ரஜினிகாந்த் உடன் ஒரு அற்புதமான ஆக்கபூர்வமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆலிம் ஹக்கிம் ஏற்கனவே ரஜினி உடன் ஜெயிலர் படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.