×

ரசிகர்களுடன் 'விடாமுயற்சி'  படம் பார்த்த அனிருத், திரிஷா, ஆரவ்  

 

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.