×

சென்சார் செய்யப்பட்ட ’வேட்டையன்’... நாளை வெளியாகும் டிரெய்லர்! 

 

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியகவுள்ள 'வேட்டையன்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வேட்டையன் படத்தின் பாடல்கள் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரெய்லர் நாளை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

null



இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு உரித்தான மாஸ் கமர்ஷியல் காட்சிகள் அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
வேட்டையன் படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மெகா ஹிட்டான ஜெயிலர் படத்திற்கும் யூ/ஏ (U/A) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.