வெற்றிநடை போடும் சந்திரமுகி 2... ஓடிடி ரிலீஸ் எப்போது?
Oct 4, 2023, 13:54 IST
கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசை அமைத்துள்ளார். கங்கனா ரணாவத், ராதிகா சர்குமார், வடிவேலு, லட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.