×

‘சந்திரமுகி 2’ ஷூட்டிங் நிறைவு... முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழு !

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா, கூல் சுரேஷ், லஷ்மி மேனன், ஸ்ருதி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் படப்பிடிப்பு பல கட்டங்களாக மைசூர் அரண்மனையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக தயாரிப்பு பணிகளை தொடங்கும் படக்குழுவினர் விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.