×

‘சந்திரமுகி மூன்றாம்’ பாகமும் இருக்கு – அப்டேட் மேல் அப்டேட் கொடுக்கும் ஹீரோ.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு  வெளியாகி மரணமாஸ் கொடுத்த திரைப்படம்சந்திரமுகிஇந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, சோனு சூட், மாளவிகா, வினித், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் சுமார் 800 க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்க லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி, மகிமா நம்பியார், ராதிகா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் ஹீரோவான ராகவா லாரன்ஸ் படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் படத்தின் இயக்குநர் பி. வாசுவிடம் பாகம் ஒன்றில் வரும் பாம்பு குறித்த சந்தேகத்தை கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர், அது என்னவென்று மூன்றாவது பாகத்தில் தான் ரிவீல் செய்வேன் என கூறினாராம். இதன் மூலமாக சந்திரமுகி படத்தின் மூன்றாம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.