×

“அவன் வந்துட்டான்……” தரமான சம்பவம் இருக்கு மிரட்டும் ‘சந்திரமுகி 2’ டிரைலர்.

 

‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பி. வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம்சந்திரமுகி’.  வாசூலை வாரி குவித்த இந்த படத்தின் காமெடி வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட்டானதுமுதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தில் வேட்டையனாக ராகவாலாரன்ஸும், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ராதிகா சரத்குமார், வடிவேலு, லெட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளதுஅதில்  “கங்காவே அந்த ஆட்ட ஆடிச்சு இப்போ ஒரிஜினல் பீஸ்சே வந்து இறங்கியிருக்கு….இது என்ன ஆட்டம் ஆட போகுதோ…..” என வடிவேலு லீட் கொடுக்க அட்டகாசமாக உள்ளது டிரைலர். இது படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

<a href=https://youtube.com/embed/gHh4l5jQJTo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/gHh4l5jQJTo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Chandramukhi 2 - Release Trailer (Tamil) | Raghava Lawrence, Kangana Ranaut | P Vasu | Subaskaran" width="716">