விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸாகும் ‘சந்திரமுகி 2’ – வெளியான சூப்பர் தகவல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மரணமாஸ் ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’. பிரபு, நாசர், ஜோதிகா, நயந்தாரா, வடிவேலு, வினீத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இந்த பாகம் சந்திரமுகி மற்றும் வேட்டையனின் கதைகளம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ரிலீச் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த வேலைகள் நிறைவடைந்ததும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.