×

 “வேட்டையன் ராஜா பராக்… பராக்..”- வந்தாச்சு ‘சந்திரமுகி 2’  லேட்டஸ்ட் அப்டேட்.

 

‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’.  வாசூலை வாரி குவித்த இந்த படத்தின் காமெடி வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.  லைக்கா நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தில் வேட்டையனாக ராகவாலாரன்ஸும், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ராதிகா சரத்குமார், வடிவேலு, லெட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். வேட்டையனை காண ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.