×

'சந்திரமுகி 2' படம் நிறைவு.. ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லாரன்ஸ் !

 

'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதையொட்டி நடிகை ராதிகாவிற்கு தங்க மோதிரம் ஒன்றை ராகவா லாரன்ஸ் பரிசாக வழங்கியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறது. பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்தை முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். 

இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் படப்பிடிப்பு பலகட்டங்களாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூர் அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ராதிகாவிற்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார். இதனால் ராதிகா இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.