×

மாறுப்பட்ட ஜோனரில் உருவாகியுள்ள 'எறும்பு'... டிரெய்லர் வெளியீடு !

 

சார்லி நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள 'எறும்பு' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திரம் என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சார்லி. தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அவருடைய வித்தியாசமான நடிப்பில் வெளியான 'உடன்பால்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்திற்கு பிறகு சார்லியின் நடிப்பில் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் 'எறும்பு'. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் சார்லியுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 'போத' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுமான சுரேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். தடம் படத்தின் மூலம் புகழ்பெற்ற அருண்ராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.