×

`சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ப்ரோமோ பாடல் வெளியானது

 

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

<a href=https://youtube.com/embed/usDNn8g6CKA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/usDNn8g6CKA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்தனர். படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோ பாடலாக மை மைமா என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் கானா பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சுபு மற்றும் ஆஃப்ரோ வரிகளில் கானா குணா, கானா தரணி இணைந்து பாடியுள்ளனர். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அனைவரும் இப்பாடலில் நடனம் ஆடியுள்ளனர். திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.