×

சேரனின் "ஆட்டோகிராப்" :  21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் என அறிவிப்பு 
 

 

பிரபல இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். 

பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதி கே.எஸ்.சித்ரா பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் 3 தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோகிராப் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பெற்ற இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.