×

தனக்கென தனி முத்திரை பதித்தவர் சரத் பாபு - முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் !

 

சினிமா உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை சரத்பாபு என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகரான சரத் பாபு, தமிழில் 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர். 71 வயதாகும் அவர் உடல் நலக்குறைவால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். 

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரின் உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்ததால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சரத் பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.