‘ஜெயிலர்’ படத்தை பார்த்த முதல்வர்.. இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டு !
‘ஜெயிலர்’ படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டினார்.
நெல்சன் - ரஜினிகாந்த் மாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. மிரட்டலாக உருவாகி வெளியாகியுள்ள இந்த படம் அசுர வேட்டை நடத்தி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ‘ஜெயிலர்’ படத்தை பிரபல திரையரங்கு ஒன்றில் பார்த்தார். அதன்பிறகு இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நெல்சன், ‘ஜெயிலர்’ படத்தை பார்த்த மாண்புமிகு முதல்வர் முக.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கும், ஊக்கத்திற்கு நன்றி. உங்கள் வார்த்தைகள் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியடைa செய்துள்ளது.