×

சிம்புதேவன் - யோகிபாபு கூட்டணியில் பிரம்மாண்ட படம்... நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு !

 
 சிம்புதேவன் - யோகிபாபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். இம்மை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 302-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம், புலி, கசட தபற, விக்டிக் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 

இதில் சிம்பு தேவன் இயக்கிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. வடிவேலு நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வடிவேலுவை வைத்து மீண்டும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் நிறுத்தப்பட்டது.

 

அதன்பிறகு நீண்ட நாட்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த சிம்புதேவன், தற்போது யோகிபாபுவை வைத்து சரித்திர படம் ஒன்றை இயக்கி வருகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.