கிறிஸ்துமஸ் ரிலீஸ் : ‘அனகோண்டா’ படத்தின் நியூ புரோமோ வெளியானது..!
சோனி தயாரிப்பு நிறுவனம் 'அனகோண்டா' படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தி அன்பெயரபிள் வெயிட் ஆப் மாஸிவ் டேலண்ட் படத்திற்கு பெயர் பெற்ற டாம் கோர்மிகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில், அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நியூ புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.