×

ஆஸ்கர் முக்கியமல்ல... கலைக்கு மொழி உள்ளது - இயக்குனர் வெற்றிமாறன் !

 

படங்களுக்கு ஆஸ்கர் முக்கியம் இல்லை. நமது படங்கள் உலக அளவிற்கு கொண்டு செல்வது முக்கியம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியா தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பொழுதுபோக்கு மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் கார்த்தி, இயக்குனர்கள் வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி, நடிகைகள் மஞ்சு வாரியர், சுகாசினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைக்கு மொழியில்லை என்றும், எல்லை இல்லை என்றும் சொல்வார்கள். ஆனால் கலைக்கு நிச்சயம் மொழி இருக்கிறது. கலாச்சாரம், எல்லை ஆகியவை உள்ளது. கலையை நுகர்வோர்களுக்குதான் எல்லை உள்ளது. இதை கொரானா நேரத்தில் நாம் உணர்ந்தோம்.  

நமது படங்களுக்கு ஆஸ்கர் வாங்குவதைவிட நம் படங்கள் உலக அளவில் கவனம் பெறுவதுதான் முக்கியம். தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், மக்களுக்கான படங்கள் தொடர்ந்து வெளி வருவதுதான். இது தொடரவேண்டும் என்று பேசினார்.