×

ஆக்‌ஷனில் அதிரடி காட்டும் சமந்தா : சிட்டாடல்: ஹனி ஃபன்னி வெப்சீரிஸ் டிரைலர்..!
 

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். 


இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். ஏற்கனவே இவர்கள் இயக்கிய தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக அவர்களது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடித்த ‘சிட்டாடெல்’ தொடரின் ஸ்பின் ஆஃபாக உருவாகியுள்ளது. ‘சிட்டாடெல்; ஹனி பனி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் சமந்தாவோடு வருண் தவணும் நடித்துள்ளனர்.      <a href=https://youtube.com/embed/r773-Cv8mK4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/r773-Cv8mK4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்தநிலையில் இத்தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஏஜெண்டாக வேலை இருப்பதாக சமந்தாவிடம் கூறும் வருன் தவண், அதற்காக சமந்தாவிற்கு பயிற்சியும் கொடுக்கிறார். அதன் பிறகு சமந்தா எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதை ஆக்‌ஷன், திரில்லர், சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது இத்தொடருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்தொடர் வருகிற நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.