×

நிறங்கள் மூன்று படத்திற்கு யு ஏ சான்றிதழ்

 

துருவங்கள் பதினாறு, மாறன் ஆகிய படங்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த படத்தில் முன்னணி நடிகராக சரத்குமார், அதர்வா, ரகுமான் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க அதீத திரில்லர் சம்பவங்கள் நிறைந்து உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.