அம்மா - அப்பா, மனைவிக்கு கோயில் கட்டிய காமெடி நடிகர் மதுரை முத்து

விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் மதுரை முத்து, தனது சொந்த ஊரில் தாய், தந்தை, மனைவிக்கு கோயில் கட்டி வருகிறார்.
விஜய் டிவியில் உள்ள அனைத்து காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மக்களுக்கு பரிட்சியமானவர் காமெடி நடிகர் மதுரை முத்து. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய ஒன் லைன் டைமிங் பஞ்ச் வசனங்கள் மிகவும் பிரபலம். இந்நிலையில், மதுரை மாவட்டம் அரசப்பட்டியில் மதுரை முத்து அவரது
தாய், தந்தை, மனைவிக்கு கோயில் கட்டியுள்ளார் மதுரை முத்து. முதல் மனைவி இறந்துவிட்ட காரணத்தால் மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுரை முத்து, இது தனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். வீட்டின் சுற்றுவட்டாரத்தில் அக்கோயிலை மதுரை முத்து கட்டியுள்ளார். 3 மாதங்களாக கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் 15 நாட்களில் திறப்பு விழா எனவும் கூறியுள்ளார். கோயில் திறப்பு விழா நாளில் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.