×

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

 

நடிகர் சதீஷ கதாநாயகனாக நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

காமெடி நடிகரான சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளிவந்த நாய்சேகர், ஓமை கோஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சதீஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ் சேவியர் இயக்கத்தில்,ஏ ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டீசர்,டிரைலர் உள்ளிட்டவை வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலிஸ் தேதி வெளியாகியுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்தப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.