×

 `எம்புரான்' படம் தொடர்பான சர்ச்சை...  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தம்..!

 

`எம்புரான்' படம் தொடர்பான சர்ச்சை வருத்தமளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்” படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும். எம்புரான்’ திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்துத்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.