கூலி படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்...!
Mar 19, 2025, 17:59 IST
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் என பலமொழி நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் கூலி படத்தை அதிகப்படியான தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் , சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.