படத்தின் டீஸரை நீக்க கோர்ட் உத்தரவு -எந்த படம் தெரியுமா ?
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி, சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பேட் கேர்ள்’. அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர்.
"பேட் கேர்ள்" படத்தின் டீஸர் வெளியானது முதல், பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, படத்தின் காட்சிகள் மற்றும் பெண்ணியம் குறித்த சித்தரிப்பு ஆகியவை சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது. பலர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர், மேலும் ஒரு தந்தை தனது பெண் குழந்தைகளை தவறாக வழிநடத்தும் விதமாக இந்த படம் இருப்பதாக குற்றம் சாட்டி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர், படத்தின் டீஸரை நீக்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது, மேலும் படத்தின் டீஸரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது