×

CSK vs MI கிரிக்கெட் போட்டி... சேப்பாக்கத்தில் குவிந்த பிரபலங்கள் !

 

CSK vs MI கிரிக்கெட் போட்டிக்காக சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சினிமா பிரபலங்கள் குவிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 31-ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியில் சென்னை - மும்பை மோதும் லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் வதேரா மட்டும் தனி ஆளாக நின்று 61 ரன் எடுத்தார். 

இதையடுத்து எளிமையான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற போட்டியை காண அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் குவிந்தனர்.

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சார் ஓ.பன்னீர்செல்வம், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நயன்தாரா, இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் போட்டியை கண்டுகளித்தனர். இது குறித்த பகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.