×

ஊனும் நீ….. உயிரும் நீ……..  - மகள் ராதாவுடன் ஸ்ரேயா வெளியிட்ட அழகிய  புகைப்படங்கள்.

 

நடிகை ஸ்ரேயா தனது மகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோலிவுட்டில் உனக்கு 20 எனக்கு 18 திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா, தொடர்ந்து விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்து நடித்துள்ளார்.இப்படி டாப் ஹீரோயினாக வலம்வந்த ஸ்ரேயா 2018-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ராதா என்ற அழகிய மகள் உள்ளார்.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் நடிப்பதை தொடர்ந்து வரும் ஸ்ரேயா சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா தற்போது தனது மகளுடன் செல்லமாக விளையாடி புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் கூட ஸ்ரேயாவிம் முன்னழகை இணையவாசி ஒருவர் வர்ணிக்க, அதற்கு “I Agree With You Guys”  என அவரது கணவர் பதிலளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.