×

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய சூரி...

 

கூட்டத்தில் ஒருவனாக நின்று, இன்று தனக்கான ஒரு கூட்டத்தையே உருவாக்கியவர் நடிகர் சூரி. காமெடியனாக அறிமுகமான இவர் தற்போது  ஹீரோ அவதாரம் எடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கியிருந்த திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களுக்கான போராடுகிற பெருமாள் வாத்தியரை உயிரோடவோ, பிணமாகவோ பிடிக்க போலீஸ் நடத்துற ஆபரேஷன் தான் விடுதலை. இருபாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னரே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மிக்ஜாம் வெள்ள நிவாரணத்திற்காக நடிகர் சூரி 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காசோலையை வழங்கியிருக்கிறார்.