×

கவினின் ‘டாடா’ பட வெற்றி... லைக்காவுடன் கைகோர்த்த இயக்குனர் !

 

 கவினின் ‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு லைக்காவின் புதிய படத்தை இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். 

முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கணேஷ் கே.பாபு. தற்போது கவினின் ‘டாடா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரான இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. காதல் மற்றும் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கணேஷ் கே.பாபு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கவுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதையொட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா வெளியிட்டுள்ளது.