×

‘ஒரு நாட்டை பாதுகாக்க...’ - வெளியான தண்டகாரண்யம் அப்டேட்

 

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலமாகவும் கதைத் தேர்வின் மூலமாகவும் கவனம் ஈர்த்த அட்டகத்தி தினேஷ். இவர் நடிப்பில் கடந்த 20ஆம் தேதி வெளியான ‘லப்பர் பந்து’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்' மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். 
இந்த நிலையில் தினேஷ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தண்டகாரண்யம் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடைஷன் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதில் தினேஷ் மற்றும் கலையரசன் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு  மரம் தீ பிடித்து எரியும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள பட நிறுவனம், “ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது” என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது. 

null


இப்படத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.