தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள தமிழ் படங்களின் பட்டியல் இதோ !
இந்த ஆண்டு தீபாவளி வரும் நவம்பர் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்று இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா 1’ என்ற பான் வேர்ல்ட் படம் வரும் நவம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேபோல தமிழில், தீபாவளியை முன்னிட்டு சில படங்களின் வெளியீடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’, ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’, மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அப்பா குட்டி’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது.
மேலும், மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘மூன் வாக்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 தமிழ் படங்கள் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளன. இதில் மேலும் சில படங்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது