×

'தேஜாவு' இயக்குனருடன் கைகோர்த்த 'குக் வித் கோமாளி' அஸ்வின்... புதிய பட அறிவிப்பு !

 

'தேஜாவு' இயக்குனர்‌ இயக்கத்தில் 'குக் வித் கோமாளி' நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் ‘தேஜாவு’. இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாகவும், ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மிஸ்டரி த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு புதிய படம் ஒன்றை அரவிந்த ஸ்ரீனிவாசன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார். ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தை ஃசென் ஸ்டுடியோ மற்றும் ஆர்கா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.  இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரெட்டை வால் குருவி’, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானவர் அஸ்வின். அதன்பிறகு ஓகே கண்மணி, ஆதித்யா வர்மா உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக தோன்றினார். அதில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் அன்பை பெற்றார். இதையடுத்து ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிரபு சாலமனின் ‘செம்பி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.