×

மிரட்டலாக உருவாகியுள்ள 'டிமான்ட்டி காலனி 2'.. ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு !

 

 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்திருந்தார். ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஞானமுத்து பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இப்படம் உருவான விதம் குறித்த மிரட்டலான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.