டிமான்டி காலனி 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்...
Jul 30, 2024, 18:50 IST

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது. இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ள நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான நொடிகளே என்ற பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.