×

குட் பேட் அக்லி படத்திலிருந்து விலகினாரா தேவி ஸ்ரீ பிரசாத் ? புது இசையமைப்பாளர் யார் தெரியுமா..? 

 


அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நினைத்ததை விட இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது.
 
அந்த வகையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் அதிரடியான மாற்றம் ஒன்று நடைபெற்று இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது குட் பேட் அக்லி படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் இயக்குனர் மாற்றம் ஏற்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதைப்போல குட் பேட் அக்லி திரைப்படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டு இருக்கின்றார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறினாரா ? இல்லையா ? என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.