ரிலீசுக்கு முன்னரே வசூலை குவிக்கும் ‘கேப்டன் மில்லர்’.. தனுஷ் படத்தின் சூப்பர் அப்டேட்
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி பலமொழிகளில் நடித்து வருபவர் தனுஷ். பிசி ஹீரோவாக அவர், தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களுக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது..இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடங்கியது. இதில் கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தனுஷ் சென்னை திரும்பினார். இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு முன்னரே வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியீட்டு உரிமை, இந்தி டப்பிங், பாடல், வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்த்து 80 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தனுஷ் படங்களிலேயே விற்பனை முன்னரே அதிக தொகைக்கு விற்பனையான படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.