×

மீண்டும் தள்ளப்போகும் தனுஷின் 'வாத்தி'... புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி !

 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இந்த படத்தின் மூலம் தெலுங்கு தனுஷ் அறிமுகமாகிறார். ‘வாத்தி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு பணிகள் நிறைவுபெறாததால் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் விஜய்யின் 'வாரிசு' படத்தை தமிழகத்தில் வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் தான் 'வாத்தி' படத்தை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.