×

போட்றா வெடிய... அதிரடியாக வெளியான 'கேப்டன் மில்லர்' அறிவிப்பு !

 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை 'ராக்கி', 'சாணிக் காயிதம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதமும், டீசர் வரும் ஜூலை மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.